உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தார் சாலையை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

தார் சாலையை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

கரூர்: கரூர் அருகே, அனுமதி இல்லாமல் கொடி கம்பம் நட, தார்சா-லையை சேதப்படுத்தியதாக, அ.தி.மு.க., நிர்வாகி உள்பட இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், மோகனுார் முல்லை நகர் பகுதியை சேர்ந்-தவர் பழனிவேல், 40; நாமக்கல் நகர அ.தி.மு.க., இளைஞர் அணி செயலாளர். இவர் கடந்த, 5 ல் தான்தோன்றி மலை அருகே, வட்-டார போக்குவரத்து அலுவலக சாலையில், உறவினர் திருமண வரவேற்புக்காக, அ.தி.மு.க., கொடி நட தார் சாலையை சேதப்ப-டுத்தியுள்ளார். இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை உதவி பொறி-யாளர் கர்ணன், 46, கொடுத்த புகார்படி, பழனிவேல், கூலி தொழி-லாளி சக்திவேல், 28, ஆகியோர் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை