| ADDED : ஆக 13, 2024 06:11 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளி தீக்கு-ளிக்க முயற்சி செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் மாற்-றுத்திறனாளி பாபு. இவர் பலமுறை மனு அளித்தும், வீடு கட்டி தராததால், தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொ-லைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.பின், அவர் கூறியதாவது:என்னால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில், வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். வீடு இல்-லாததால் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்ததின் அடிப்ப-டையில், ஏமூர் கிராமத்தில், 2022ம் ஆண்டு இடம் ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. அந்த இடத்தில் அரசு திட்டத்தில் கீழ், வீடு கட்டி தருமாறு, 30க்கும் மேற்பட்ட மனுக்களை கலெக்டர், அரசு துறை அலுவலர்களிடம் அளித்தும் நடவடிக்கை இல்லை.இவ்வாறு கூறினார்.தொடர்ந்து, கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தார்.