| ADDED : ஜூலை 17, 2024 08:51 AM
கரூர், : ஆகம விதிகளுக்கு முரணாக, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆக., 12ல் நடக்கும் தெய்வ திருமண விழா அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, பசுபதீஸ்வரர் வழிபாடு மன்றம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயம் மற்றும் 1,000 ஆண்டுகள் பழமையானது கரூர் கல்யாண பசுப-தீஸ்வரர் கோவில். இங்கு ஆகம விதிகளுக்கு முரணாக, தனியார் அமைப்பு சார்பில் தெய்வ திருமண விழா நடக்கிறது. இந்த விழாவில் சீர் வரிசை கொண்டு வருதல், அன்ன தானம் நடத்-துவதாக கூறி வசூல் செய்கின்றனர். நன்கொடை வாங்குவதற்கு எந்த ரசீதும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. வியாபாரிகள், பொது-மக்களிடம் பணம் வசூல் செய்கின்றனர். வரும் ஆக., 12ல் தெய்வ திருமண விழா நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும். ஹிந்து-சமய அறநிலையத்துறை சார்பில், ஆகம விதிப்-படி விழாவை நடத்த வேண்டும். அப்படி விழாவை ரத்து செய்யவில்லை என்றால், ஆக., 10, 11, 12 ஆகிய நாட்களில் கோவில் கோபுரம் முன்புறம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.