உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாதாள சாக்கடை இணைப்பு பகுதிகளில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

பாதாள சாக்கடை இணைப்பு பகுதிகளில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில், தார்ச்சாலை அமைக்க-வில்லை. இதனால், குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.கடந்த, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, 48 வார்டுகளில், முதல் வார்டு முதல், 32வது வார்டு வரை பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14,000 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. மீத-முள்ள தான்தோன்றிமலை பழைய நகராட்சி மற்றும் சணப்பி-ரட்டி பழைய கிராம பஞ்சாயத்து பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு-கிறது.இந்நிலையில், வீடு, வணிக நிறுவனங்களின் கழிவுநீர் குழாய்-களை, பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்க, சாலையில் குழி தோண்டப்பட்டது. ஆனால், பல பகுதிகளில் இணைப்பு வேலைகள் முடிந்த பின், தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால், கரூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கிய தெருக்களில், சாலை குண்டும், குழியுமாக உள்ளது.குறிப்பாக, கரூர் ஜவஹர் பஜார் தினசரி மார்க்கெட் சாலையில் மிகப்பெரிய குழிகள் உள்ளன. இதனால், இரவு நேரத்தில் டூவீலர்-களில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடை-கின்றனர். எனவே, கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் இணைக்கப்பட்ட தெருக்களில், புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ