உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் பரவலாக மழை பஞ்சபட்டியில் 89 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் பரவலாக மழை பஞ்சபட்டியில் 89 மி.மீ., பதிவு

கரூர்: கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், அதிக-பட்சமாக பஞ்சபட்டியில், 89 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு-கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல், பலத்த தரை காற்றுடன், மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி முதல் கன-மழை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது.மூன்று மணி நேரம் பெய்த மழையால், கரூர்-திண்டுக்கல் சாலையில் சுங்ககேட் மற்றும் தான்தோன்றிமலை பகுதியில், சாலையோரத்தில் இருந்த பழமையான மரங்கள் விழுந்தன. அப்-பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. போலீசார், நெடுஞ்-சாலை துறை, தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் இணைந்து மரங்களை அகற்றினர்.அதிகபட்சமாக பஞ்சபட்டியில், 89 மி.மீ., மழை பெய்தது. மற்ற இடங்களில் மழை அளவு: பாலவிடுதியில், 57 மி.மீ., கரூர், 28.60, அரவக்குறிச்சி, 5.2, அணைபாளையம், 19.40, க.பரமத்தி, 4, கிருஷ்ணராயபுரம், 8, மாயனுார், 14.40, கடவூர், 22, மைலம்பட்டி, 17.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 265.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ