உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்

கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்

கரூர் : கரூர் அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு, இரும்பு கம்பியால் அடி விழுந்தது.கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டி முத்து நகரை சேர்ந்தவர் பொம்முராஜ், 38; இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 35; என்பவரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு, 5,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோடங்-கிப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் முன், பொம்முராஜ் நின்று கொண்டிருந்தார்.அப்போது, அங்கு சென்ற மணிகண்டன், அவரது உறவினர் வினோத்குமார், 20; ஆகியோர், பொம்முராஜிடம் கடனை திருப்பி கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த பொம்மு ராஜ் இரும்பு கம்பியால், வினோத்குமாரை அடித்துள்ளார்.அதில், காயமடைந்த வினோத்குமார், கரூர் அருசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தான்-தோன்றிமலை போலீசார் விசாரித்து, பொம்முராஜை கைது செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ