உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தார்ச்சாலை அமைக்க தாமதம் பொது மக்கள் கடும் அவதி

தார்ச்சாலை அமைக்க தாமதம் பொது மக்கள் கடும் அவதி

கரூர் : கரூர் அருகே நரிக்கட்டியூர் சாலையில் தார்ச்சாலை அமைக்கா-ததால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.கரூர் அருகே, நரிக்கட்டியூர் வழியாக, திருச்சி தேசிய நெடுஞ்-சாலை வரை, 500க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு பள்ளி மற்றும் கொசுவலை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள், நாள்தோறும் கார், வேன், டூவீலர் உள்-ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், நரிக்-கட்டியூர் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டு-கொள்ளாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே, நரிக்கட்டியூரில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பகுதி யில், விரைவாக தார்ச்சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ