உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் சாலை விவசாயிகள் கடும் அவதி

மோசமான நிலையில் சாலை விவசாயிகள் கடும் அவதி

கிருஷ்ணராயபுரம், ஆக. 22-விளை நிலங்களுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், விவசாயிகள் செல்லும் சாலை உள்ளது. இதன் வழியாக விளை நிலங்களுக்கு வாகனங்களில் செல்கின்றனர். மேலும் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், வெற்றிலை மூட்டைகளை விவசாயிகள் எடுத்து வரும் போது சிரமப்படுகின்றனர். சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை வழியாக எந்த பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, புதிய தார் சாலை அமைக்க டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை