உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநில எறிபந்து போட்டி கரூர் அணி சாம்பியன்

மாநில எறிபந்து போட்டி கரூர் அணி சாம்பியன்

கரூர் மாநில எறிபந்து போட்டியில், கரூர் அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.மாநில அளவிலான எறிபந்து போட்டி ஈரோட்டில் இரண்டு நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில், 24 அணிகள், பெண்கள் பிரிவில், 23 அணிகள் கலந்து கொண்டன. லீக் முறையில் நடத்தப்பட்ட போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும், கால் இறுதிக்கு எட்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தொடர்ந்து நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. .ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், கரூர் அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை ஈரோடு அணியும், மூன்றாவது இடத்தை கிருஷ்ணகிரி அணியும் பெற்றன. பெண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி அணி முதலிடமும் இரண்டாவது இடத்தை ஈரோடு, மூன்றாவது இடத்தை சென்னை அணியும் பிடித்தன.சிறந்த வீரராக ஆண்கள் பிரிவில் கரூரை சேர்ந்த மும்மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.கரூர் மாவட்ட எறிபந்து வீரர்களை, கூடைப்பந்து குழு செயலாளர் கமாலுதின், ஜே.சி.ஐ., தலைவர் சூர்யா, ரோட்ராக்ட் கிளப் கரூர் தலைவர் ஜீவானந்தன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை