உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தடுப்பு சுவர்களில் போஸ்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தடுப்பு சுவர்களில் போஸ்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் : கரூர் சுங்ககேட், காந்தி கிராமம், தான்தோன்றிமலை, திருமாநி-லையூர், சுக்காலியூர், திண்ணப்பா கார்னர் உள்பட மாநகரின் முக்-கிய சாலைகளில் எளிதாக போக்குவரத்து நடைபெறும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பு சுவர்களில் பல்வேறு தனியார் அமைப்புகள், அரசியல் கட்சியினர், தடுப்பு சுவர்களில் விளம்பர நோட்டீஸ், போஸ்டர்களை அதிகளவு ஒட்டி வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சித-றடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, தடுப்பு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும். மீண்டும் ஒட்டாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ