உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாஜி அமைச்சர் ஜாமின் மனு விசாரணை வீடியோ கால் ஒளிபரப்பு செய்தவர் கைது

மாஜி அமைச்சர் ஜாமின் மனு விசாரணை வீடியோ கால் ஒளிபரப்பு செய்தவர் கைது

கரூர், : முன்னாள் அமைச்சர் ஜாமின் மனு மீதான விசாரணையை, வீடியோ கால் மூலம், ஒளிபரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நிலம் அபகரிப்பு, கொலை மிரட்டல் புகார் தொடர்பான வழக்கில், முன் ஜாமின் கேட்டு கரூர் மாவட்ட அ.தி.மு.க., செய-லரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு மீதான, விசாரணை நேற்று மாலை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.அப்போது கரூரை சேர்ந்த தமிழினியன், 29, நீதிமன்ற விசார-ணையை மொபைல் போன் வீடியோ கால் மூலம், சிலருக்கு ஒளி-பரப்பு செய்துள்ளார். இதுகுறித்து, நீதிமன்ற எழுத்தர் வீரகுமார் கொடுத்த புகார்படி, தமிழினியனை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட தமிழினியன், வீடியோ கால் மூலம், முன் ஜாமின் கேட்டுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவி-னரும், அ.தி.மு.க., ஐ.டி., விங்க் பொறுப்பாளருமான ஒருவ-ருக்கு, ஒளிபரப்பு செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை