உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கரூர்: கரூர் அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம், கரூர் அருகே ராயனுார் தீரன் நகர் பகு-தியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 1,000 கிலோ ரேஷன் அரிசியை, மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் ஒரு மொபட் பறி-முதல் செய்யப்பட்டது. அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த திருச்சியை சேர்ந்த சீனிவாசன், 38, என்ப-வரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ