உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.1.62 கோடியில் 3 கால்நடை மருந்தகம்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு

ரூ.1.62 கோடியில் 3 கால்நடை மருந்தகம்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு

குளித்தலை, ஆக. 21-குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டி, தோகைமலை, கடவூரில் புதிதாக கட்டப்பட்ட, 3 கால்நடை மருந்தகங்களை, வீடியோ கான்பரன்சில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தலா, 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள, மூன்று கால்நடை மருந்தகங்கள் திறப்பு விழா, நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். கலெக்டர் தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், கரூர் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.குளித்தலை உதவி இயக்குனர் (பொ) ராஜேந்திரன், கால்நடை உதவி மருத்துவர்கள் மலைராஜ், சிவானந்தம், திருமுருகன், கவுதம், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், தோகைமலை, தரகம்பட்டியில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ