உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.28 சதவீதம் தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.28 சதவீதம் தேர்ச்சி

கரூர்: கரூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில், 92.28 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் -1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் மாதம் நடந்தது. கரூர் மாவட்டத்தில், 105 பள்ளிகளை சேர்ந்த, 4,839 மாணவர்கள், 5,505 மாணவியர் என மொத்தம், 10,344 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 4,297 மாணவர்கள் , 5,248 மாணவியர் என மொத்தம், 9,545 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 92.28 சதவீத தேர்ச்சியாகும்.நடப்பு ஆண்டு, மாணவர்கள், 88.80 சதவீதம், மாணவியர், 95.33 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள், 82.71 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள், 92.68 சதவீதமும், தனியார் பள்ளிகள், 98.77 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், 3 அரசு பள்ளிகளும், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 19 தனியார் பள்ளிகளும் என மொத்தம், 24 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.மாநில அளவில் கரூர் மாவட்டம், 15 வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 92.00 சதவீதத்திலிருந்து, இக்கல்வி ஆண்டில் 92.28 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ