உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கரூர், க.பரமத்தி அருகே, பீடா கடை உரிமையாளரிடம், அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.க.பரமத்தி, பூலாங்கல் வலசு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ், 38. அதே பகுதியில் உள்ள, டாஸ்மாக் மதுபான கடை அருகே, பீடா கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காசிப்பாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்த்தன், 26, என்பவர் பால்ராஜிடம் அரிவாளை காட்டி மிரட்டி, 200 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்து, பால்ராஜ் அளித்த புகார்படி, க.பரமத்தி போலீசார் விஷ்ணு வர்த்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை