உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தரிசு நிலம் மேம்படுத்தும் திட்டம் கி.புரம் விவசாயிகளுக்கு அழைப்பு

தரிசு நிலம் மேம்படுத்தும் திட்டம் கி.புரம் விவசாயிகளுக்கு அழைப்பு

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில், வேளாண்மைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலம், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டமும் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தற்போது, 'கலைஞர்' அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2024 - 2025ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சப்பட்டி, வீரியபா-ளையம், சித்தலவாய், சேங்கல், கருப்பத்துார் ஆகிய கிராமங்-களில், சாகுபடி செய்யப்படாமல் தரிசு நிலமாக உள்ள நிலங்-களில் முட்புதர்களை நீக்கவும், நிலத்தை உழுது சமன்படுத்தவும், ஒரு ஹெக்டேருக்கு, 9,600 ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள கிராம விவசாயிகள், உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், நில ஆவணங்கள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல், மார்பளவு புகைப்படம் ஆகிய-வற்றை இணைத்து தர வேண்டும் என, விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை