| ADDED : ஆக 18, 2024 03:21 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிரா-மத்தில், நடேசன் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 37 ஆண்டுகள் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துக்கண்ணுவின், முதலா-மாண்டு நினைவு நாள், நேற்று அவரது குடும்பத்தார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.அதையொட்டி, காலை, 10:00 மணிக்கு, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில், முத்துக்கண்ணுவின் நினைவாக, பள்ளிக்கு சத்துணவு கூடம் அமைக்க பூமி பூஜை விழா நடந்தது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு உணவு சாப்பிட வசதியாக சில்வர் தட்டு, டம்-ளர்களை வழங்கினர். தலைமை ஆசிரியர் காளியம்மாள் தலைமை வகித்தார்.மறைந்த ஆசிரியை முத்துக்கண்ணுவின் மகன், திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி பேராசிரியர் ராஜசேகரன், மகள்கள் தாமரை-செல்வி, கிரிஜா, அனுராதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மறைந்த ஆசிரியை முத்துக்கண்ணுவின், உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.