உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்குகள் மோதல் வாலிபர் பலி

பைக்குகள் மோதல் வாலிபர் பலி

கரூர், கரூர் அருகே, பைக்குகள் மோதி கொண்ட விபத்தில், வாலிபர் உயிரிழந்தார். சிறுமி உள்பட, இரண்டு பேர் காயமடைந்தனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பூங்கா நகர், இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன், 22; இவர் நேற்று முன்தினம், தான்தோன்றிமலை சிவசக்தி நகர் பகுதியில், பஜாஜ் பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, கரூர் திருகாம்புலியூரை சேர்ந்த ராஜேஷ்குமார், 34, என்பவர் ஓட்டி சென்ற ஸ்பிளண்டர் பிளஸ் பைக், பார்த்திபன் மீது மோதியது. அதில், கீழே விழுந்த பார்த்திபன் தலையில் அடிபட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ராஜேஷ்குமார், அவரது மகள் நிதாரணி, 2, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்