உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை மறியலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு

சாலை மறியலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு

குளித்தலை, குளித்தலையில், தேவேந்திர குல வேளாளர் சார்பில் நடப்பட்ட கம்பத்தில் இருந்த கொடியை, மர்ம நபர்கள் அறுத்து கீழே போட்டிருந்தனர். தகவல் அறிந்த அந்த பிரிவை சேர்ந்த இளைஞர்கள், பொது மக்கள் கொடியை அறுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று காலை 8:00 மணியளவில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில், திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் எச்சரிக்கை செய்தும் கேட்கவில்லை. இதையடுத்து போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திய, வளரும் தமிழக கட்சி மாநில மாணவரணி செயலர் தமிழன் துரைராஜ், 24, ஜீவா, 33, உள்பட ஒன்பது பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி