உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டையில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு

லாலாப்பேட்டையில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை பகுதி காவிரி ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்வதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி, சிந்தலவாடி ஆகிய கிராம மக்களுக்கு லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. கடந்த சில நாட்களாக மாயனுார் கதவணை வழியாக டெல்டா பகுதிக்கு கூடுதல் காவிரி நீர் ஆற்றில் செல்கிறது. இதனால் குடிநீர் தெட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், மக்கள் சரிவர குடிநீர் கிடைக்கமால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், மக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை