உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செஸ் போட்டி துவக்கம்

செஸ் போட்டி துவக்கம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி அளவிலான செஸ் விளையாட்டு போட்டி துவங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ரத்தினம் துவக்கி வைத்தார். இதில் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவிலான செஸ் போட்டி நடந்தது. வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நேற்று நடந்த போட்டியில், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி