உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செல்லாண்டிப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

செல்லாண்டிப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கரூர், கரூர் மாவட்டம், வெள்ளியனை பஞ்சாயத்துக்குட்பட்ட செல்லாண்டிப்பட்டியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:கடந்த டிசம்பரில், 50 இடங்களில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், 20,748 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 16,165 மனுக்கள் பல்வேறு துறையின் கீழ் மனுதாரர்களுக்கு நல திட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. 15 அரசு துறைகள் சார்பில் ஒரே இடத்தில், 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன.மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை மனுக்களை எளிதாக பதிவு செய்யும் வகையில் சாய்வுதள வசதி, சக்கர நாற்காலி, குடிநீர் வசதி. சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.கரூர் எம்.பி.,ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, எஸ்.பி., பிரபாகர், டி.ஆர்.ஓ., கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ