உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்

கரூர் மாவட்டத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்

கரூர் மக்களுடன் முதல்வர் முகாம், இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம், இன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடக்கிறது. க.பரமத்தி வட்டாரத்திற்குட்பட்ட விஸ்வநாதபுரி, நெடுங்கூர், காருடையம்பாளையம், பவித்திரம், புன்னம் ஆகிய பஞ்.,களுக்கு பாலமலை சாஸ்தா மஹாலிலும், கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட மாவத்துார், செம்பியநத்தம் ஆகிய பஞ்.,களுக்கு கோடங்கிப்பட்டி சமுதாயக்கூடத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்குட்பட்ட பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய பஞ்.,களுக்கு பாலராஜபுரம் சுவாதி மஹாலிலும், தோகைமலை வட்டாரத்திற்குட்பட்ட சின்னியம்பாளையம், கழூகூர் ஆகிய பஞ்.,களுக்கு ஏ.உடையாபட்டியிலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ