உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாஜி அமைச்சரிடம் 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

மாஜி அமைச்சரிடம் 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

கரூர்:கரூர் அருகே, நில அபகரிப்பு புகாரில், கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து கரூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இதையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, கரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவரை, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், சி.பி.சி.ஐ.டி., போலீசார், கரூர் தின்னப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் இரவு, 11:00 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.நேற்று காலை, 2வது நாளாக அவரிடம் விசாரணை துவங்கியது. அப்போது, நில அபகரிப்பு புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் குறித்தும், அவர்களுடான தொடர்புகள் குறித்தும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்துள்ளனர்.அதற்கு, விஜயபாஸ்கர், நில அபகரிப்பு புகாரில், தமக்கு தொடர்பு எதுவும் இல்லை என, பதில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி