கரூர்: கரூர் மாவட்ட காவல் துறையில், முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் வரும், 24ல் நடக்கிறது.இதுகுறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வரும், 20 காலை, 7:00 மணி முதல், முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம் நடைபெறும் நாள் வரை பார்வைக்கு வைக்கப்படும். வரும், 24ல் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் வரும், 22 காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை இருசக்கர வாகனங்களுக்கு, 1,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு, 2,000 ரூபாயும் முன்வைப்பு தொகை செலு த்தி, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலம் தொகையுடன், ஜி.எஸ்.டி.,யையும் சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும். மேலும், வாகனங்கள் ஏலம் தொடர்பாக, தலைமை காவலர்கள் பார்த்திபன், 96986-84346, செந்தில் குமார், 94981-61215 ஆகியோரை மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.