உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் ஓட்டு எண்ணும் மையம் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

கரூரில் ஓட்டு எண்ணும் மையம் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

கரூர்: ஓட்டு எண்ணும் மையத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் ஆய்வு செய்தார்.கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், கரூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் பார்வையிட்டார். அப்போது, ஓட்டுக்கள் எண்ணும் இடத்தில் தடுப்பு வேலிகள் அமைத்தல், ஓட்டு எண்ணும் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சியினரின் முகவர்களுக்கும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார்.அப்போது டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், விமல்ராஜ் (நிலமெடுப்பு) உள்ளிட்டோார் உடனிருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி