உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா, பொன்னணி ஆறு அணைக்கட்டு பகுதியில் இருந்து மணல், கிராவல் மண் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கடவூர் தாசில்தார், வி.ஏ.ஓ., வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அதிவேகமாக வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இரண்டு யூனிட் மண் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், பூஞ்சோலைப்பட்டியை சேர்ந்த கார்த்தி, 34, என்பவர் விற்பனைக்காக மண் திருடியது தெரியவந்தது.மண் கடத்திய டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். டிராக்டர் டிரைவர் தப்பி ஓடினார்.இது குறித்து இடையப்பட்டி கிழக்கு வி.ஏ.ஓ., அன்புராஜ் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ