| ADDED : மே 01, 2024 02:10 AM
கரூர்:ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோவிற்கு, 8 ரூபாய் உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. இங்கு தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை, நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடக்கும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.அங்கு நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், 605 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் கிலோ சராசரி விலையாக, 99 ரூபாய், கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிகபட்ச விலையாக, 103 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 8 ரூபாய் உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இதே போல, 12,000 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய் விலை குறைந்தபட்ச விலையாக, 27 ரூபாய், அதிகபட்ச விலையாக, 32 ரூபாய்க்கு ஏலம் போனது.