உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிறிஸ்தவ சர்ச் பணியாளர்கள் நல வாரியத்துக்கு பதிவு செய்ய அழைப்பு

கிறிஸ்தவ சர்ச் பணியாளர்கள் நல வாரியத்துக்கு பதிவு செய்ய அழைப்பு

கரூர்:கிறிஸ்தவ சர்ச் பணியாளர்கள் நல வாரியத்தில், பதிவு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ சர்ச்சில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படுகிறது. உறுப்பினர் பதிவுக்கான விண்ணப்பத்தை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெறலாம். பணிபுரியும் கிறிஸ்தவ சர்ச் நிர்வாகி அல்லது வி.ஏ.ஒ., ஆகியோரிடமிருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இணைய வழி செயல்பாட்டிற்கு வரும் வரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் நேரடி விண்ணப்பத்தை சரிபார்த்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை