உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கரூர் : கரூர் அரசு கலைக்கல்லுாரியில், இளம் அறிவியல், முதலமாண்டு மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு நேற்று நடந்தது.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு இளம் கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் கடந்த, 30 ல் தொடங்கியது. சிறப்பு பிரிவுகளான என்.சி.சி., முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திற னாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடபிரிவுகளுக்கும், பி.காம்.,- பி.காம்., சி.ஏ.,- பி.பி.ஏ., ஆகிய பாடபிரிவுகளுக்கும், பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய பாட பிரிவுகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர். நேற்று பி.எஸ்.சி., முதலாமாண்டு பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடந்தது. அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும், 24, 26, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது என, அரசு கலைக்கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ