உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மீது லாரி மோதல் கூலித்தொழிலாளி பலி

டூவீலர் மீது லாரி மோதல் கூலித்தொழிலாளி பலி

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில், கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், அதியமான் கோட்டை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 35; இவர், நேற்று முன்தினம் டூவீலரில், அதே பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம், 38, என்பவருடன், வேலாயுதம்பாளையம் அருகே, புன்னம் சத்திரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். டூவீலரை விஜயகுமார் ஓட்டினார். அப்-போது, அந்த வழியாக சென்ற லாரி, டூவீலர் மீது மோதியது. அதில், கீழே விழுந்த விஜயகுமார், தலையில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். சண்முகசுந்தரத்துக்கு காயம் ஏற்பட்டது. வேலாயுதம்பாளையம் போலீசார், அரியலுாரை சேர்ந்த, லாரி டிரைவர் ராஜா, 45, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை