உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறுவட்ட கோகோ போட்டியில் நொய்யல் அரசு பள்ளி வெற்றி

குறுவட்ட கோகோ போட்டியில் நொய்யல் அரசு பள்ளி வெற்றி

கரூர்: கரூர் குறு வட்ட அளவிலான கோ-கோவில், 19 வயதுக்குட்-பட்டோர் போட்டியில், நொய்யல் ஈ.வெ.ரா., அரசு மேல் நிலைப்-பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், கரூர் குறுவட்ட அளவிலான கோகோ போட்டி, நொய்யல் ஈ.வெ.ரா., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அதில், 14 வயதுக்குட்பட்டோ-ருக்கான மாணவர்கள் பிரிவில் நொய்யல் ஈ.வெ.ரா., அரசு மேல்-நிலைப்பள்ளி முதலிடம், புன்னம் சத்திரம் ஸ்டார் மேல்நிலை இரண்டாமிடம் பெற்றனர். மாணவிகள் பிரிவில், நொய்யல் ஈ.வெ.ரா., அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், எல்லைமேடு கே.வி.வி., பள்ளி இரண்டாமிடம் பெற்றது.மேலும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மார்னிங் ஸ்டார் பள்ளி முதலிடம், நொய்யல் ஈ.வெ.ரா., மேல்நிலைப்-பள்ளி இரண்டாமிடம் பெற்றது. மாணவிகள் பிரிவில், பசுபதிபா-ளையம் சாரதா மேல்நிலைப்பள்ளி முதலிடம், மார்னிங் ஸ்டார் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நொய்யல் ஈ.வெ. ரா., அரசு மேல்நிலைப்பள்ளி மாண-வர்கள் முதலிடம், வெண்ணைமலை கொங்கு வெள்ளாளர் பள்ளி இரண்டாமிடம் பெற்றது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கரூர் மாவட்ட உடற்-கல்வி ஆய்வாளர் ஜெய லட்சுமி, பள்ளி தலைமையாசிரியர் தமிழ் செல்வி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி