உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சத்துணவு அமைப்பாளர் மயங்கி விழுந்து மரணம்

சத்துணவு அமைப்பாளர் மயங்கி விழுந்து மரணம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்., எழுதியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயா, 44. இவர், மேட்டு திருக்காம்புலியூர் யூனியன் தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இவர் தலைக்கு டை போட்டுள்ளார்.அது அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு புண்ணாகியது. அதன் பிறகு தலைவலி ஏற்பட்டது. அதற்கு மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார். தலைவலி சரியாகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த, 21 மதியம், 1:15 மணியளவில் மாயனுார் காட்டூர் நெடுஞ்சாலையில் ராசாங்கோயில் அருகே மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவரை கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.இது குறித்து அவரது மகன் கமலேஸ், 24, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை