உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மோதியதில் முதியவர் படுகாயம்

டூவீலர் மோதியதில் முதியவர் படுகாயம்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே தொக்குப்பட்டி தொகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 65. இவர் நேற்று காலை, 7:00 மணியளவில் அரவக்குறிச்சியில் இருந்து ராஜபுரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். தொக்குப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, இதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், 35, என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர் தங்கவேல் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தங்கவேலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தங்கவேல் சகோதரி வீராயி அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்