உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கம்பத்தில் உள்ள கொடிகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கம்பத்தில் உள்ள கொடிகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம் : பிள்ளபாளையம் வாய்க்கால் கரையில் உள்ள மின்கம்பம் மேல் புறத்தில் செடிகள் வளர்ந்து மின்கம்பிகள் மீது படர்ந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் வாய்க்கால் கரையில் மின்கம்பம் உள்ளது. குடி-யிருப்பு மற்றும் பஞ்சாயத்து மின்மோட்டர்க-ளுக்கு மின்சாரம் வினியோகம் கிடைக்கிறது. தற்போது சாலை அருகில் உள்ள, மின்கம்பத்தின் மேல்புறத்தில் அதிகமான கொடிகள் படர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் காற்று மற்றும் மழை பெய்யும் நேரங்களில், மின் கசிவு ஏற்பட்டு மின் ஒயர்களில் இருந்து நெருப்பு பரவுகிறது. மேலும் இதனால் மின் தடை ஏற்படுகிறது. எனவே, மின்கம்பத்தில் படர்ந்து வரும் கொடி-களை அகற்றி, சீராக மின்சாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை