| ADDED : ஜூலை 30, 2024 04:48 AM
கரூர்: மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என, த.மா.கா., மேற்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது:தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு மக்கள் மீது பெரும் சுமையாக பல்வேறு வரிகளை உயர்த்தி இருக்கிறது. பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. மீண்டும் மின் கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள், சிறு, குறு நிறுவனங்கள் உள்-பட பல தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர்.எந்த பிரச்னைக்கும் மத்திய அரசு மேல் குறை சொல்லியே தி.மு.க., அரசு தப்பிக்க பார்க்கிறது. மின் கட்டணம் மட்டுமின்றி, மின்சார நிலை கட்டணம், வைப்பு தொகை உயர்த்தப்பட்டுள்-ளது. புதிய திட்டம் இல்லாததால், வெளியில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது. சூரிய சக்தி, காற்றாலை போன்ற மரபு சாரா எரிசக்தியை ஊக்குவிக்க வேண்டும். அனல், நீர்மின் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலன் கருதி உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.