மேலும் செய்திகள்
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
10-Aug-2024
குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷ சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை-பெற்றது. இதேபோல் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்-டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்த-ரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்-தரேஸ்வரர் உள்ளிட்ட சிவாலங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அனை-வருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
10-Aug-2024