கரூர்: பூசாரிகள் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பூசாரிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது. க.பரமத்தி, செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில், தமிழக கோவில் பூசாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். கூட்டத்தில், கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது; பூசாரிகள் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்; ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் எண்ணிக்கை உச்சவரம்பை, 4,000 ரூபாயிலிருந்து, 10,000 ரூபாயாக உயர்த்தவேண்டும்.பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய் வழங்க வேண்டும். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பணி-யாற்றி வரும் பூசாரிகளை பணி நிரந்தரம், ஊக்கத்தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். பூசாரி-களுக்கு வீட்டுமளை ஒதுக்கி தரவேண்டும். பூசாரி நல வாரிய உறுப்பினர்களுக்கு சிறு தொழில் தொடங்க வட்டியில்லா கடன், 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; மேற்கண்ட கோரிக்கை-களை வலியுறுத்தி, விரைவில் கரூரில் மாநாடு நடத்துவது என்-பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், சங்க மேற்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் சந்தி-ரசேகர், சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் அங்க-முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.