உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டையில் சாலை அமைக்கும் பணி மும்முரம்

லாலாப்பேட்டையில் சாலை அமைக்கும் பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை முதல், வல்லம் வரை சாலை புதுப்பிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை முதல் பிள்ளபாளையம் வல்லம் வரை தார் சாலை இருந்தது. இந்த சாலை மோசமாக இருந்ததால், புதிய சாலை அமைக்கும் பணி கடந்த வாரத்தில் துவங்கப்பட்டது. இதில் பழைய சாலைகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து புதிய சாலை அமைக்கும் வகையில், சிமென்ட் கலவை கற்கள் கொண்டு சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.லாலாப்பேட்டை கடைவீதி முதல், கொடிக்கால் தெரு மற்றும் பிள்ளபாளையம் வரை சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி