கரூர்: ''கூட்டுறவு சங்கங்கள் மூலம், ரசாயன உரங்களும் விற்பனை செய்யபடுகிறது'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், முடி கணம் மற்றும் சமுத்திரம் பகுதிகளில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளைகள் தொடக்க விழா நேற்று நடந்தது. அதில், 113 பய-னாளிகளுக்கு, ஒரு கோடியே, 43 லட்சத்து, 79 ஆயிரம் மதிப்பி-லான கடனுதவியை வழங்கிய, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:தமிழக அரசு கூட்டுறவு துறை மூலம், பொதுமக்கள் முன்னேற்றத்-துக்காக, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகி-றது. பெண்கள் முன்னேற்றத்துக்கு, சுய உதவி குழுக்கள் மூலமும், கடனுதவி வழங் கப்படுகிறது.முடிகணம் கூட்டுறவு கடன் சங்கத்தில், 2,752 'அ' வகுப்பு உறுப்-பினர்கள் உள்ளனர். சங்கத்தின் பங்கு மூலதனம், 2.33 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் வரை சங்கத்தின் அனைத்து கடன்களின் நிலுவை தொகை, 27 கோடியே, 34 லட்ச ரூபாயாக உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம், ரசாயன உரங்-களும் விற்பனை செய்யப்படுகிறது. அதை, பொதுமக்கள் பயன்ப-டுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அப்போது, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கூட்டுறவு சங்-கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.