உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்றில் மணல் கடத்தல் சரக்கு வாகனம் பறிமுதல்

ஆற்றில் மணல் கடத்தல் சரக்கு வாகனம் பறிமுதல்

குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தண்-ணீர்பள்ளி காவிரி ஆற்றில் மணல் கடத்துவதாக டி.எஸ்.பி,, செந்தில்குமாருக்கு வந்த தகவலின்-படி, நேற்று அதிகாலை குளித்தலை போலீசார் தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றில் சோதனை செய்-தனர்.அப்போது, இரணியமங்கலம் பஞ்., வளையப்-பட்டி நடுத்தெருவை சேர்ந்த பொலியோ பிக்கப் வாகன டிரைவர் வினோத்குமார், 30, குளித்த-லையை சேர்ந்த உரிமையாளர் மணிகண்டன் ஆகியோர் திருட்டுத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்டனர்.அப்போது, போலீசார் சுற்றி வளைத்தனர். மணிகண்டன் தப்பினார். டிரைவர் வினோத்கு-மாரை பிடித்து, பிக்கப் வாகனத்தில் இருந்த அரை யூனிட் ஆற்று மணலை பறிமுதல் செய்தனர். குளித்தலை போலீசார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து, டிரைவர் வினோத்குமாரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொலிரோ பிக்கப் வாகனம், குளித்தலை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்-டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை