உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,769 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,769 வழக்குகளுக்கு தீர்வு

ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம், ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். குடும்ப நல நீதிபதி ஹேமா, சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா உடனிருந்தனர். சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் பங்கேற்றனர். சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சண்முக பிரியா ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில், 5,456 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 1,769 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மதிப்பு, 12 கோடியே, 60 லட்சத்து, 23 ஆயிரத்து 600 ரூபாய் ஆகும்.மோட்டார் வாகன விபத்து வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடாக, 53.50 லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்று கொடுக்கப்பட்டது. இதேபோலே கோபி, பவானி, பெருந்துறை, சத்தி, அந்தியூர், கொடுமுடியிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி