உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

கரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

கரூர்: கரூர் அருகே, அனுமதி இல்லாமல் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட, ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்-களின் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமையில், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி முன், நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்-தது.தமிழக பள்ளிக்கல்விதுறை அரசாணை எண், 243 ஐ ரத்து செய்ய வேண்டும், பொது மாறுதல் கலந்தாய்வை, ஒன்-றிய அளவில் மட்டும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர்.இதையடுத்து, அனுமதி இல்லாமல் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் ரகுபதி, ராஜா, இருதயசாமி, செல்வதுரை உள்பட, 40 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தான் தோன்றி-மலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ