உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி நிர்வாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாநில துணை தலைவர் மகாவிஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை