மேலும் செய்திகள்
மிளகாய் சாகுபடி பணி மும்முரம்
14-Dec-2025
இரும்பூதிபட்டியில் ஆடு, கோழி விற்பனை மந்தம்
14-Dec-2025
கரூர் : தபால் ஓட்டு எண்ணும் மையத்தில் இருக்கை இல்லை என, தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அரை மணி நேரம் எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.கரூர், எம்.குமாராசாமி பொறியியல் கல்லுாரியில், தபால் ஓட்டுக்கள் எண்ணுவதற்கென, 8 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் என மொத்தம், 7,708 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. தபால் ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள இருக்கைகளில், பா.ஜ., பூத் ஏஜென்டுகள் அமர்ந்து விட்டனர். தங்கள் பூத் ஏஜென்டுகளுக்கு இருக்கை கொடுக்கவில்லை, அவர்கள்தான் முன்னால் அமர்ந்திருக்கின்றனர் என கூறி, தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் வாக்குவாதம் நீடித்ததையடுத்து, கரூர் தேர்தல் நடத்தும் அலுவலரான தங்கவேல், கரூர் எஸ்.பி., பிரபாகர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.
14-Dec-2025
14-Dec-2025