உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

குளித்தலை, குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., இருபூதிபட்டி பெரிய பாலம், காட்டு வாரியில் மணல் திருடப்படுவதாக குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம், டிப்பர் லாரியில் ஒரு யூனிட் மணல் அள்ளும்போது கையும் தளவுமாக சிக்கினர். பொக்லைன் இயந்திரத்தின் உரிமையாளர் இருபூதிபட்டி சரவணன், 32, டிப்பர் லாரி டிரைவர் சுரேஷ், 25, பொக்லைன் டிரைவர் கதிர்வேல், 35, ஆகிய மூவரும் தப்பி விட்டனர்.இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரியை குளித்தலை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ