உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாங்கல் - மோகனுார் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்

வாங்கல் - மோகனுார் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்

கரூர், கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த, 2016ல், 43 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.அப்போது, பாலத்தில் மின்விளக்குகள் அமைக்காததால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங் களை சேர்ந்த, பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர். மேலும், பாலத்தில் இரவு நேரத்தில் வழிப்பறி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த, 2018ல் பாலத்தில், ஒரு பக்கத்தில் மின் கம்பங்கள் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டன. தற்போது, பெரும்பலான மின் கம்பங்களில், விளக்குகள் சரியாக எரிவது இல்லை.இந்நிலையில், கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில், வாங்கல் பாலத்தில் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் விளக்குகள் சரிவர எரியாததால், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வாங்கல்-மோகனுார் உயர்மட்ட பாலத்தில் போடப்பட்ட மின்கம்பங்களில், அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி