உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  மாணவி மீது அவதுாறு 14 பேர் சஸ்பெண்ட்

 மாணவி மீது அவதுாறு 14 பேர் சஸ்பெண்ட்

கரூர்: மாணவியை அவதுாறு பேசிய 14 மாணவ, மாணவியர், கல்லுாரியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த, 17 வயது மாணவி, கரூர் அரசு கலைக்கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார். இவர், கல்லுாரியில் பணியாற்றி வரும், பேராசிரியர் ஒருவருக்கு சாதகமாக பேசி வருவதாக கூறி, மாணவ, மாணவியர் சிலர், அவதுாறாக பேசியுள்ளனர். மனம் உடைந்த மாணவி, டிச., 15ல், மாத்திரைகளை சாப்பிட்டு, கல்லுாரி விடுதியில் தற்கொலைக்கு முயன்றார். மாணவி புகாரில், நான்கு மாணவியர், 10 மாணவர்கள் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக, கரூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியர், 14 பேரை சஸ்பெண்ட் செய்து, கல்லுாரி முதல்வர் சுதா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ