உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டத்தில் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் தகவல்

கரூர் : ''மாவட்டத்தில் மார்ச், 3ல், 74 ஆயிரத்து, 954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட திட்டமிடப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.கரூர் மாவட்டத்தில், நாடு தழுவிய போலியோ சொட்டு மருந்து புகட்டும் சிறப்பு முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தத. இதில், கலெக்டர் தங்க வேல் தலைமை வகித்து பேசியதாவது: மார்ச், 3ல் தீவிர போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம், 831 மையங்களில் நடக்கிறது. கிராமப்பகுதியில், 726 மையங்களிலும், நகராட்சி பகுதியில், 105 மையங்களிலும் நடக்கிறது. நடப்பு ஆண்டில், 74 ஆயிரத்து 954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 24 ஆண்டுகளாக போலியோ நோயால் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படவில்லை.நோயற்ற நிலையை தக்கவைத்துக் கொள்ள, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து புகட்டவேண்டியது மிக அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ