| ADDED : ஜூலை 31, 2024 12:05 AM
கிருஷ்ணராயபுரம்: மின்சார கம்பியில் உரசி, சோளத்தட்டு தீப்பிடித்து எரிந்து நாசமா-னது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கட்டளை, ரெங்காநாதபுரம், வீரராக்-கியம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது சோளம் பயிர்கள், அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில், கால்நடைகளுக்கு தேவை-யான சோளத்தட்டை விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். இந்நி-லையில் கட்டளை பகுதி யில் இருந்து, விவசாயி ஒருவர் சோளத்-தட்டுகளை விலைக்கு வாங்கி, டிராக்டரில் ஏற்றிக்கொண்டு கட்-டளை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது மின் கம்பிகளில் சோளத்தட்டு உரசியது. இதில் சோளத்தட்டு முற்றிலும் எரிந்தது. மேலும் டிராக்டருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற மக்கள், அருகில் உள்ள கிணற்று நீரை எடுத்து தீயை அணைத்தனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து மாயனுார் போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.